Skip to main content

Posts

Showing posts from September, 2020

உலகநல வாழ்த்து - வேதாத்ரி மகரிஷி!

உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும் உழவர் எல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும் உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும் உழவர் எல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும் பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும் பகுத்து உணர்வில் தொகுத்து உணர்வு பண்பாட்டை  உயர்த்தட்டும் உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும் கலகங்கள் போட்டி பகை கடந்து ஆட்சி நடக்கட்டும் கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும் கலகங்கள் போட்டி பகை கடந்து ஆட்சி நடக்கட்டும் கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும் நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும் நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும் நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும் நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும் நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும் நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் Transcribed By Sudarvizhi, Wellness Seeker